ஜுலை 9 மரணம்: விசாரணைக்கான விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது தமது கணவர் பஹாருடின் அகமட் திடீரென மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கு மாஜிஸ்திரேட் ஒருவருக்கு உத்தரவிடுமாறு ரோஸ்னி மாலான் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ரோஸ்னி மாலானின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்த நீதிபதி சு ஜியோக் இயாம்,  அந்த விண்ணப்பததை முதிர்ச்சியில்லாதது, முக்கியமில்லாதது, வெறுப்பூட்டுவது, நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவது என வருணித்தார்.

“ஏனெனில் மாஜிஸ்திரேட் முடிவு செய்வதற்கு எதுவும் இல்லை,” என அவர் சொன்னார்.

“அதனால் இந்த வழக்கில் பிரதிவாதிகளைப் பிரதிநிதித்த டிபிபி சமர்பித்த தொடக்க ஆட்சேபத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது,” என்றார் அவர்.

கோலாலம்பூர் தலைமைப் போலீஸ் அதிகாரி, தேசியப் போலீஸ் படைத் தலைவர், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட், அரசு வழக்குரைஞர் ஆகியோரை ரோஸ்னி தமது விண்ணப்பத்தில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.