கெராக்கான் இடைக்காலத் தலைவர் சாங் கொ யவுன், கட்சி உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் சோர்ந்து போய்விட்டார்கள்”,என்றாரவர். கடந்த மாதம் கோ சூ கூன் பதவி விலகியதை அடுத்து சாங் (படத்தில் வலமிருப்பவர்) இடைக்காலத் தலைவரானார்.
“மனம் தளரக்கூடாது. அரசியல் ஒரு நீண்டகாலப் போராட்டம். அப்போராட்டத்தில் பக்காத்தான் ரக்யாட்டை எதிர்கொள்ள தயாராக வேண்டும்”, என்றாரவர்.
கட்சியை வலுப்படுத்த சாங் இப்போது நாடு முழுக்க பயணம் செய்து வருகிறார்.