எம்ஏசிசி-யின் நாட்ஸ்ரி EAIC பணிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டார்

EAICஇரண்டு போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களை விசாரிக்கும் பணிக்குழுவிலிருந்து  EAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் தனது முதுநிலை உதவி  இயக்குநர் முகமட் நாட்ஸ்ரி இப்ராஹிமை நீக்கியுள்ளது.

அந்தப் பணிக்குழு சம்பந்தப்பட்ட எந்த வேலையிலும் முகமட் நாட்ஸ்ரி
சம்பந்தப்படக் கூடாது என நேர்மை ஆணையம் முடிவு செய்துள்ளது என அதன்  தலைவர் ஹெலிலியா முகமட் யூசோப் கூறினார்.

என்றாலும் மற்ற பணிகளைத் தொடருவதற்காக அவர் தொடர்ந்து ஆணையத்தில்  பணியாற்றி வருவார் என அவர் சொன்னார்.

பணிக்குழுவிலிருந்து முகமட் நாட்ஸ்ரி நீக்கப்பட்டதற்கான காரணம்
தெரிவிக்கப்படவில்லை.EAIC1

தடுப்புக் காவலில் இருந்த போது மரணம்டைந்த அரசியல் உதவியாளரான தியோ  பெங் ஹாக்கை விசாரித்த எம்ஏசிசி அதிகாரி முகமட் நாட்ஸ்ரி என்ற தகவல்  அம்பலமானதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  நம்பப்படுகின்றது.

போலீஸ் தடுப்புக் காவலில் என் தர்மேந்திரன், ஆர் ஜமேஷ் ரமேஷ்  மரணமடைந்தது பற்றி விசாரிப்பதற்காக EAIC அறுவர் கொண்ட பணிக்குழுவை  அமைத்துள்ளது.

 

TAGS: