ஒற்றுமை அரசாங்கம் அமைக்கலாம் என்று பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அதிகாரப்பூர்வமாக சொன்னது இல்லை என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.
ஆனால், அரசியல் வட்டாரங்களில் “தனிப்பட்ட முறையில் அது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம்” என்பதை அவர் மறுக்கவில்லை.
அரசியலில் இப்படிப்பட்ட வதந்திகள் சகஜம்தான் என்றாரவர்.
அவருக்குத் துணைப் பிரதமர் பதவியும் பக்காத்தானுக்கு நான்கு அமைச்சர் பதவிகளும் வழங்க நஜிப் முன்வந்ததாகக் கூறப்படுவது பற்றிக் கேட்ட செய்தியாளர்களிடம் அன்வார் இவ்வாறு கூறினார்.
எப்படி தூது அனுப்புவாரு… அல்தான் துயாவை கொள்ள வேனுமென்றால் தூது அனுப்புவாரு… இது தெரியவில்லையா அன்வாருக்கு!