பாடாங் மெர்போக்கில் கூடாரமிட்டுத் தங்க என்ஜிஓ-கள் திட்டம்

sammசொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) தலைமையில்  பல என்ஜிஓ-கள்,  கோலாலும்பூர் 505 கறுப்புப் பேரணியை நீட்டித்து நடத்தும் நோக்கில் சனிக்கிழமை தொடங்கி மேலும் இரண்டு இரவுகளுக்கு பாடாங் மெர்போக்கிலேயே கூடாரமிட்டுத் தங்க முடிவு செய்துள்ளன.

பேரணிக்கு வருவோர், அதற்குத் தயாராக வர வேண்டும் என்று எஸ்ஏஎம்எம் இன்று ஓர் அறிக்கையில் கேட்டுகொண்டது.

“எஸ்ஏஎம்எம் 150 கூடாரங்களை அமைக்கும். கூட்டத்தில் கலந்துகொள்வோர் தங்குவதற்கான ஏற்பாடுகளுடன் வர வேண்டும்”, என எஸ்ஏஎம்எம் நிறுவனர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின்(வலம்) கூறினார்.

சனிக்கிழமை பேரணிக்கான இறுதி விளக்கமளிப்பு நாளை இரவு மணி 8.30க்குக் கோலாலும்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்ப்ளி மண்டபத்தில் நடைபெறும் என்றும் எஸ்ஏஎம்எம் கூறிற்று.