‘கறுப்பு தினப் பேரணி’ கோலாலம்பூரில் கூட்டம் ஆயிரக்கணக்கில் பெருகுகிறது

Rallyபக்காத்தான் ராக்யாட் நாடு முழுவதும் 505 கறுப்பு தினப் பேரணிகளை நடத்திய  பின்னர் இன்று கோலாலம்பூரில் 15வது பேரணியை நடத்தின்றது.

சர்ச்சைக்குரிய மே 5 தேர்தலுக்கு ஒன்றரை மாதம் கழித்து கோலாலம்பூர் பேரணி  நிகழ்கின்றது.

தேர்தல் ஆணையத்தின் நடப்புத் தலைவர்களும் ஆணையர்களும் பதவி துறந்து  புதிய இசி தலைமைத்துவம் இரு தரப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுப்   பொறுப்பேற்க வேண்டும் என்பதும் பக்காத்தானுடைய அடிப்படைக்  கோரிக்கைகளாகும்.

பேரணி பங்கேற்பாளர்கள் கோலாலம்பூர் மாநகரில் ஏழு இடங்களில் ஒன்று கூடி  பாடாங் மெர்போக்கை நோக்கிச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Rally1

ஆனால் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த இடங்களுக்குச்  செல்லாமல் நேரடியாக பாடாங் மெர்போக்கிற்கு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோஹோ கடைத் தொகுதி வளாகத்திலிருந்து பிற்பகல் மணி 2.30க்கு ஊர்வலம்  தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது வரையில் பல பேச்சாளர்கள்  உரையாற்றுகின்றனர்.

அங்கு பிற்பகல் மணி 1.20 வாக்கில் 1,200 பேர் காணப்பட்டனர். அவர்களில்  பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசோப் ராவாவும் பிகேஆர் உதவித் தலைவர்  தியான் சுவாவும் தென்பட்டனர்.

மஜ்ஸித் ஜமெய்க்கில் எல் ஆர் டி நிலையத்திலிருந்து தாப்பாவைச் சேர்ந்த ஒராங்  அஸ்லி குழு ஒன்று ஊர்வலமாக செல்கின்றது. அந்தக் குழுவில் இருந்தவர்கள்  ‘இசி பொய்யர்கள்’ என முழங்கின்றது.

பிரிக்பீல்ட்ஸில் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சண்டியாகோ, சமூகப் போராளி  ஹிஷாமுடின் ராயிஸ், சுவாராம் நிர்வாக இயக்குநர் நளினி ஏழுமலை ஆகியோர்  காணப்பட்டனர்.

அவர்கள் இரண்டு மணிக்கு பாடாங் மெர்போக்கை நோக்கி ஊர்வலத்தைத்  தொடங்கினர்.

ஜாலான் ராஜா லாவுட் பாஸ் தலைமையகத்துக்கு வெளியில் 500க்கும்
மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப்  அங்கு காணப்பட்டார்.

கோலா திரங்கானு எம்பி ராஜா பாஹ்ரெய்னும் அங்கு தென்பட்டார்.

ஜாலான் சுல்தானில் 1,500 பேர் பிற்பகல் மணி 1.10க்கு கூடியிருந்தனர். டிஏபி  தலைவர்களுடன் Solidariti Anak Muda Malaysia (SAMM) தலைவர் பத்ருல்  ஹிஷாம் ஷாஹ்ரெனும் அங்கு இருந்தார்.

தேசியப் பள்ளிவாசலுக்கு பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி பிற்பகல்  மணி 1.10 வாக்கில் வந்து சேர்ந்தார்.. சிலாங்கூர் பாஸ் தலைவர் டாக்டர் அப்துல்  ரானி ஒஸ்மானும் அங்கு காணப்பட்டார்.

 

TAGS: