அணி அணியாக பாடாங் மெர்போக்கை நோக்கி படையெடுப்பு

1 rallyகோலாலும்பூர் 505 கறுப்புப் பேரணியில் 300,000 பேர் திரள்வார்கள் என பிகேஆர் எதிர்பார்த்தாலும் பிற்பகல் மணி 2 முடிய சுமார் 10,000 பேர்தான் பல்வேறு ஒன்றுகூடுமிடங்களில் சேர்ந்துள்ளனர்.

பேரணி இடத்தைச் சுற்றிலும் புகை மூட்டம் கவிந்திருந்தாலும் பேரணியில் கலந்துகொள்வோரின் உற்சாகத்துக்குக் குறைவில்லை.

ஜாலான் ராஜா லாவிட்டில் கூடியுள்ளவர்களிடையே பேசிய பாஸ் இளைஞர் செயல்குழு உறுப்பினர் முகம்மச் சானி ஹம்சான், அங்குள்ள கூட்டம் பாடாங் மெர்போக் செல்லுமுன்னர் சோகோ விற்பனை மையத்தை நோக்கிச் செல்லும் என்றார். அவர்களின் ஊர்வலத்துக்கு பாஸ் உதவித் தலைவர் தலைமை தாங்குவார்.

1 rally mas negaraசோகோ பகுதியில் சுமார் 1,200 பேர் கூடியுள்ளனர்.

பிரிக்பீல்ட்சில் கூடியிருந்தவர்கள், லெம்பா பந்தாய் எம்பி  நுருல் இஸ்ஸா தலைமையில் பாடாங் மெர்போக்கை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் அருட்செல்வன், வழி நெடுகிலும் நிற்கும் போலீஸ்காரர்களிடம் சினமூட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டார்.

1 rally asliமஸ்ஜித் நெகாராவில் ஸொகோர் தொழுகையை முடித்துக்கொண்டு சுமார் 5,000 பேர் பாடாங் மெர்போக் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மஸ்ஜித் ஜாமெக் எல்ஆர்டி நிலையத்திலிருந்து, பேராக் தாப்பாவைச் சேர்ந்த ஓராங் அஸ்லி குழுவொன்று, “இசி பொய்யர்கள்” என்று முழங்கிக் கொண்டே பாடாங் மெர்போக் நோக்கி உற்சாகமாக சென்றார்கள்.

பிரிக்பீல்ட்சிலிருந்து செல்லும் அணியுடன் வழியில் மேலும் பலர் வந்து சேர்ந்துகொண்டார்கள். இப்போது சுமார் 2,000 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

ஜாலான் துன் சம்பந்தன் வழியாக ஜாலான் கினாபாலுவை நொக்கிச் செல்லும் அவர்கள் “ரீபோர்மாசி”,  “மக்கள் வாழ்க” என்று முழக்கமிட்டுக்கொண்டே செல்கிறார்கள்.