பேரணிக் கூட்டம் நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனப் பெருகியது

1 rally 2பிற்பகல் மணி மூன்று: பாடாங் மெர்போக் நோக்கி சுமார் 20,000 பேரடங்கிய பேரணி சென்று கொண்டிருக்கிறது. பாடாங் மெர்போக்கில் 505 கறுப்புப் பேரணி இயக்குனரும் சுங்கை பட்டாணி எம்பியுமான ஜொஹாரி அப்துல் கூட்டத்தாரிடையே பேசினார்.  போலீசும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றமும் பேரணி ஏற்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்பதாக அவர் சொன்னார். அது ஜனநாயகத்துக்கு ஒரு நல்ல அறிகுறி என்றார்.

1 rally crowdபொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தக் கூடாது; குப்பைகளைக் கண்ட இடத்தில் போடக்கூடாது என்று அவர் கூட்டத்தாருக்கு நினைவுறுத்தினார். அத்துடன் அவர்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அது அமைதிப் பேரணி என்று குறிப்பிட்ட ஜொஹாரி அது குழப்பத்தை உண்டுபண்ணும் போலீஸ்காரர்களுக்கு சினமூட்டும் என்று கூறப்படுவதெல்லாம் உண்மையல்ல என்றார்.

 

பிரிக்பீல்ட்சிலிருந்து செல்லும் அணியுடன் வழியில் மேலும் பலர் வந்து சேர்ந்துகொண்டார்கள். இப்போது சுமார் 2,000 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

ஜாலான் துன் சம்பந்தன் வழியாக ஜாலான் கினாபாலுவை நொக்கிச் செல்லும் அவர்கள் “ரீபோர்மாசி”,  “மக்கள் வாழ்க” என்று முழக்கமிட்டுக்கொண்டே செல்கிறார்கள்.