”முஸ்லிம் அல்லாத ஷாரியா வழக்குரைஞர் பிரச்னைகளை அதிகரிக்கும்’

islamகூட்டரசுப் பிரதேசத்தில் ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வாதாட அனுமதிக்கும் முறையீட்டு நீதிமன்ற முடிவு இஸ்லாமிய  அமைப்புக்களில் உள்ள பதவிகள் தொடர்பாக பல பிரச்னைகளை ஏற்படுத்தும்  என மலேசிய முஸ்லிம் வழக்குரைஞர் மன்றம் கூறுகின்றது.islam1

விக்டோரியா ஜெயசிலி மார்ட்டின் தொடுத்த வழக்கில் அந்த நீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு ‘ஏமாற்றம்’ அளிப்பதாகவும் அது குறிப்பிட்டது.

“சட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பிட்ட பதவிகள் முஸ்லிம்களினால் நிரப்பப்பட  வேண்டும் என உண்மையில் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்தத் தீர்ப்பு பல  பிரச்னைகளை உருவாக்கி விடும்,” என்றும் அந்த சங்கம் தெரிவித்தது.