கோலாலம்பூர் தலைமைப் போலீஸ் அதிகாரி அவர்களே தூண்டி விடுகின்றவர்கள் எங்கே ?

cpoகலவரம் ஏற்படும் என்ற எண்ணத்துடன் அத்தகைய தவறான அறிக்கையை  முகமட் சாலே விடுத்தது ஏமாற்றமளிக்கிறது. அது பொறுப்பற்றதாகும்.

போலீசார்: எங்களைத் தூண்டி விடுமாறு பேரணி பங்கேற்பாளர்களுக்கு
ஆணையிடப்பட்டுள்ளது

பன்மடங்கு: மகாதீர் தத்துவம் திரும்புவதற்கான அறிகுறி அது. 1990களில் நிகழ்ந்த  முதலாவது reformasi பேரணிகள் நினைவிருக்கிறதா ? தூண்டி விடுகின்றவர்களைப்
பயன்படுத்தி அவற்றில் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் தலைமைப் போலீஸ் அதிகாரி முகமட் சாலே எதிர்மறையான  மனோதத்துவத்தைப் பயன்படுத்துகின்றார். அது ஏறத்தாழ மகாதீர் பாணியாகும்.  அதாவது கல்லை எறிந்த பின்னர் குழப்பம் எனச் சொல்வது.

பல இனம்: வன்முறையில் இறங்குமாறு ‘505 கறுப்பு தின’ பேரணி
ஏற்பாட்டாளர்கள் ஒரு போதும் பங்கேற்பாளர்களைத் தூண்டி விட்டதே இல்லை.  கூட்டத்தினர் ஒழுங்காக நடந்து கொள்வதை உறுதி செய்ய அவர்கள் உறுதியுடன்  செயல்பட்டனர்.

மக்கள் வன்முறையில் இறங்குவதற்கு எந்தக் காரணமும் இல்லை. வன்முறை  ஏற்பாட்டாளர்களுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை.

நான் பெர்சே, பக்காத்தான் ராக்யாட் பேரணிகளில் பங்கு கொண்டுள்ளேன்.  முகமட் சாலே சொல்வது போல கூட்டத்தினர் ஒரு முறை கூட நடந்து  கொண்டதில்லை. உயர் நிலை போலீஸ் அதிகாரி அரசியல் விளையாட்டில்  ஈடுபடுவது வருத்தமளிக்கின்றது.

நியாயமானவன்: நடப்பு சூழ்நிலையில் முகமட் சாலே இதைத் தான் சொல்ல  முடியும்.

கவனம்: எல்லா அரசாங்க அமைப்புக்களையும் போன்று போலீசாரும் ‘505 கறுப்பு  தின’ பேரணி பற்றி கதைகளை ஜோடிக்கின்றனர்.

அவர்கள் திரைப்பட வசனங்களை எழுத ஹாலிவுட் திரைப்படத்
தயாரிப்பாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

உத்தேச கலவரங்கள் பற்றி ஆதாரம் இருந்தால் அவர்கள் உடனடியாக அதற்குத்  திட்டமிட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கலவரம்  நிகழ்வதற்குக் காத்திருக்கக் கூடாது.

கிம் குவேக்: கெட்ட நோக்கத்துடன் பரப்பப்படும் அந்த வதந்திகளின் நோக்கம்  பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுப்பதாகும் முகமட் சாலே அரசியல்  கருவியாக செயல்படுகிறார்.

கிராமப் பையன்: கலவரம் ஏற்படும் என்ற எண்ணத்துடன் அத்தகைய தவறான  அறிக்கையை முகமட் சாலே விடுத்தது ஏமாற்றமளிக்கிறது. அது  பொறுப்பற்றதாகும். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பேச்சற்றவன்: முகமட் சாலே அவர்களே, ‘505 கறுப்பு தின’ பேரணி
ஏற்பாட்டாளர்கள் அத்தகைய உத்தரவை வெளியிட்டதற்கான ஆதாரங்கள் எங்கே  ?

அபாஸிர்: போலீசார் அத்தகைய அபத்தமான ஆரூடங்களைச் சொல்வதை  நிறுத்திக் கொண்டு கோலாலம்பூர் அபாயகரமான நகரம் என மக்கள்  எண்ணுவதைப் போக்க குற்றச் செயல்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்த  வேண்டும்.

முஷிரோ: போலீசாரைத் தூண்டி விடுமாறு பேரணி பங்கேற்பாளர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என போலீஸ் வேவுத் தகவல்கள் சொல்வது ‘வியப்பை’  அளிக்கின்றது.

இதே போலீஸ் வேவுத் துறை லஹாட் டத்துவுக்குள் முழு ஆயுதங்களுடன்  ஊடுருவிய 100 சுலு பயங்கரவாதிகளை கண்டு பிடிக்கத் தவறி விட்டது.

போலீஸ் வேவுத் துறை ஆற்றல் இவ்வளவு தானா ?