சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றத்திலும் பின்னர் செய்தியாளர் கூட்டத்திலும் சற்றுக் கண் அயர்ந்துவிட்டார்.
விடுவார்களா தொலைக்காட்சியினர். படம் பிடித்துக் காட்டி விட்டார்கள்.
உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் காலிட் அரைத்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் என அவரின் உதவியாளர்கள் கூறினர்.
அதை காலிட்டும் தம் முகநூல் பக்கத்தில் ஒப்புக்கொண்டு, “ஒரு மனிதனுக்கு உடல்நலக் குறைவால் இப்படி நேர்வதுண்டு. மக்கள் என் பணியை வைத்து என்னை மதிப்பிட வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்பதிவைப் பார்த்த பலரும் அவர் நலமுற வாழ்த்துத் தெரிவித்தனர்.
கண் அயர்வு எல்லோருக்கும் வரும்,ம.இ.கா.பொது பேரவையில் ,பிற்பகல் சாப்பாட்டுக்கு பிறகு பல பேராளர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை இரவு 7.30 தமிழ் செய்தியில் காணலாம்.
நாட்டில் 1008 பிரச்சினைகள் இருக்கும்போது, எவன் எவளோடு போகிறான், எவன் கண்ணயர்கிறான், எவன் 18+ படம் பார்க்கிறான் என்பதைப் படம் பிடிப்பதும், அடுத்தவன் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதும் தான் நம்நாட்டு பத்திரிகையாளர்கள் பலர் செய்யும் முதல் சமுதாயப்பணி. கிள்ளானில் வந்து பாருங்கள். போதுமான கார் நிறுத்தும் வசதி இல்லாததால் காரோட்டிகளும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் அவசர தேவைக்கு சற்று நேரம் சாலை ஓரம் தத்தம் வண்டிகளை நிறுத்தினால், எங்கிருந்தோ அதை மோப்பம் பிடித்து வந்து ‘சம்மன்’ எழுதுகிறார்கள். ஆனால், வெள்ளிக்கிழமை மதியம் 12.00 முதல் பிற்பகல் 3.00 மணிவரை இதற்கு விதிவிலக்கு. (காரணம் உங்களுக்கே புரியும்) அந்த நேரம் சாலைகளை மறைத்தும், மரித்தும் கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த அவல நிலையை படம் பிடித்து செய்தி போட எந்த பத்திரிகையாளனுக்கும் தைரியம் கிடையாது. இதுதான் நிதர்சனம்!
குத்தூசி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மலேசியா முழுக்க இது தான் நடக்கிறது, ஒரே மலேசியா என்பதெல்லாம் உதடு வரை தான், நிஜத்தில் இல்லை. பல வட்டாரத்தில் நம் வழிபாட்டு இடங்களில் வாகன நிறுத்தும் இடம் பத்தும் பத்தாமல் தான் இருக்கிறது. பல நேரங்களில் வாகனத்தை நிறுத்த கூட இடம் இல்லாமல் தவிக்கும் உள்ளங்கள் பல. அதிலும் நாம் கற்றுகொள்ள வேண்டிய ஒன்று அவர்கள் உடுத்தும் உடை. என்ன தான் கைலி என்ற வார்த்தை நமக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அதைதான் அவர்கள் சமய உடையாக அணிந்து வருவார்களே அன்றி நம் இன ஆண்களை போல கண்ட தெருப்பொருக்கி ஆடைகளை அணிவது கிடையாது. இதை நாம் உணர்கிறோமோ இல்லையோ இதை தைப்பூச தினத்தில் ஒரு வேறு இன போலிஸ் அதிகாரி தன் சக அதிகாரியிடம் சொன்னதை நானே கேட்டேன்.
ஆண்டிக்கு ஒரு சட்டம் அப்துல்லாவுக்கு ஒரு சட்டம் அசொஹ்குக்கு ஒரு சட்டம் முன்பு இப்போ பாங்க்லாவுக்கு இந்தோனிசியாவுக்கு ஒரு சட்டம்முன்னு வந்துடுச்சு …….
முதலில் நம் இனம் மாற வேண்டும். Maggai நான் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.
ஒரு கண்ணில் தேன்…மறு கண்ணில் சுனாம்பு… தெரியுமோன்னோ கதை…. அப்புறம் என்ன? நாய் மலையை பார்த்து குறைத்த கதையா மனசில் நெனச்சிண்டு ….போய்கிட்டே இருக்க வேண்டியது தான். அது தான் புத்தி சாலி தனம் . அரசியலில், இதெல்லாம் சகஜம் தான் ஸ்ரீ , நீங்க பாட்டுக்கு போய்கினே இருங்க, மக்கள் நன்மையை நோக்கி. சபாஷ்.