ஜோகூரின் அரச நகரான மூவாரில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) 750 என அபாய எல்லையைத் தொட்டிருப்பதால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குனர் ஹலிமா ஹசான் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் அவசரநிலையை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என இயற்கைவள சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி.பழனிவேல் கூறினார்.
மூவார் உள்பட மூன்று மலேசிய நகரங்களில் காற்றின் தரம் இன்று காலை அபாய எல்லையைத் தொட்டதாக பழனிவேல் அவரது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
நம்ம பிரதமர் உண்மையிலேயே எந்த நாட்டுக்கு பிரதமர் என்று இப்போதெல்லாம் அடிக்கடி எனக்குள் கேள்வி எழுகிறது. புகைமூட்டத்தால் மலேசிய மக்கள் அவதிப்படுகிறார்கள். இங்கே செயற்கை மழைப் பெய்யச் செய்வதைவிட்டு விட்டு, இந்தோவில் செயற்கை மழைப் பெய்விக்க உதவி செய்யப் போகிறாராம்.
புகை ! மூட்டமும், அரசியல் ஆகிவிட்டது… நல்ல வேலை, புகை மூட்டத்துக்கு அன்வார்தான் காரணம் என்று சொல்லவில்லை…!