பாடாங் மெர்போக்கில் சில கூடாரங்கள் அகற்றப்பட்டன. ஆனால் SAMM அங்கு தொடர்ந்து இருக்கும்

tentsபாடாங் மெர்போக்கில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் எண்ணிக்கையை  பாதியாக குறைக்க Solidariti Anak Muda Malaysia (SAMM) முடிவு செய்துள்ளது.

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்துடன் (DBKL) சமரசம் செய்து கொள்ளும்  முயற்சி அதுவெனக் கருதப்படுகின்றது.

இன்று நண்பகலுக்குள் அந்தத் திடலைக் காலி செய்யுமாறு DBKL நோட்டீஸ்  கொடுத்த பின்னர் 40 கூடாரங்கள் அகற்றப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர்  பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் கூறினார்.

பிற்பகல் மணி 1.30 வரையில் DBKL எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இன்னும் 50 கூடாரங்கள் அங்கு உள்ளன.

அடுத்த நடவடிக்கை பற்றி SAMM விவாதித்து வருவதாகவும் பத்ருல் சொன்னார்.

“நாங்கள் ஒவ்வொன்றாகச் செய்வோம். எங்களுக்கு DBKL-உடன் பிரச்னை  ஏதுமில்லை. தேர்தல் ஆணையத்துடன் தான் பிரச்னையே. அது விலக வேண்டும்,”  என்றார் அவர்.

505 கறுப்பு தினப் பேரணியைத் தொடர்ந்து அந்தத் திடலில் மொத்தம் 246 பேர்  (பெரும்பாலும் இளைஞர்கள், மாணவர்கள்) முகாம்களை அமைத்துக்  கொண்டுள்ளனர்.