புகைமூட்டத்துக்குக் காரணமானவை என்று இந்தோனேசியாவால் அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு மலேசிய நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்.
எட்டு மலேசிய நிறுவனங்கள் தோட்டங்களை எரித்து துப்புரவு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்று இந்தோனேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பல்தசார் கம்புவாயா கூறியுள்ளார். இது தடைசெய்யப்பட்ட ஒரு நடைமுறை.
“அது உண்மையாயின் இந்தோனேசியா மட்டுமல்லாமல் மலேசியாவும் அந்நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டு”, என்றாரவர்.