புவா: கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆறு நெடுஞ்சாலைகள் எங்கே?

மக்களவையில் அண்மையில் சமர்பிக்கப்பட்ட 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் “அதிக தாக்கத்தைக் ” கொண்டுள்ள ஐந்து புதிய நெடுஞ்சாலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்ற ஒர் எதிர்க்கட்சி எம்பி, கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட ஆறு நெடுஞ்சாலைகள் எங்கே போயின என வினவினார்.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிருபர்களிடம் பேசிய பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா அவ்வாறு வினவினார்.

கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஆறு நெடுஞ்சாலைத் திட்டங்களின்l கட்டுமானம் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது தமக்கு குழப்பத்தைத் தந்துள்ளதாக அவர் சொன்னார்.

பிரதமர் நேற்று அளித்த எழுத்துவப்பூர்வமான பதிலின் அடிப்படையில் தாம் இந்தக் கேள்வியை எழுப்புவதாக புவா குறிப்பிட்டார்.

அந்த ஆறு திட்டங்களும் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகின்ரன அல்லது கொள்கை அளவில் மட்டுமே ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது- உறுதியான குத்தகை அல்லது திட்டங்கள் ஏதும் இது வரை கொடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் தமது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

அத்தகைய தாமதங்கள் புதிதாக அறிவிக்கப்படுள்ள ஐந்து புதிய திட்டங்கள் மீது எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்காது என்றும் அவற்றை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் நஜிப் சொன்னார்.

.