புகைமூட்டம் மோசமானால் வெளிவேலைகளை நிறுத்த வேண்டும்

1doshபுகைமூட்டம்  வருந்தத்தக்க அளவுக்கு  மோசமடையுமானால் வெளிவேலைகளைக் குறைப்பது அல்லது ஒட்டுமொத்தமாக நிறுத்துவது நல்லது என பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை (டோஷ்) தலைமை இயக்குனர் டாக்டர் ஜொஹாரி பஸ்ரி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“வெளி இடங்களிலும் கட்டுமானப் பகுதிகளிலும் வேலை செய்வோரின் நலங்காக்க முதலாளிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

“பாரம் தூக்கிகளை இயக்குவோர் புகைமூட்டத்தின் காரணமாக  பார்க்க இடர்படுவார்கள். இதனால் அபாயத்துக்கு ஆளாவார்கள்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.