கல்வியில் தகுதிமுறை என்பது சீனர்களுக்குதான் நன்மையாக உள்ளது

1 ibrahomமலாய் ஆலோசனை மன்றத் தலைவர் இப்ராகிம் அபு ஷா, கல்வியில் தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய நடைமுறை அகற்றப்பட வேண்டும் என்று கூறியிருப்பதை மலாய்க் கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

“தகுதிமுறையால் கல்வியில் சீனர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். அது மலாய் மாணவர்களுக்கு நன்மை செய்யவில்லை. உயர்கல்வி நிலையங்களில் மலாய் மாணவர்களின் எண்ணிக்கை 35 விழுக்காடுதான். மற்றவர்கள் சீனர்கள்.

“அரசாங்கம் தகுதிக்கு முன்னுரிமை அளிப்பதால் மலாய்க்காரர்களுக்கு உதவிச் சம்பளங்கள் நிறைய கிடைப்பதில்லை. கடந்த ஆண்டில் 80 விழுக்காட்டு சீன மாணவர்கள்தான் உதவிச் சம்பளங்களைப் பெற்றார்கள்”.

மாரா தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான இப்ராகிம் சனிக்கிழமை நடைபெற்ற ‘மலாய் மற்றும் பூமிபுத்ரா கல்வி மாநாட்டில் இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது..