ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி என்னதான் வாய்கிழிய கோரிக்கை விடுத்தாலும் தேர்தல் மன்ற (இசி) உயர் அதிகாரிகள் பதவிவிலகும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அவ்வாணையத்தின் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்.
தங்களைப் பதவிவிலகக் கோருவது பொறுப்பற்றதாகும் என்பதுடன் அது அரசமைப்புக்கு விரோதமான செயலுமாகும் என்றாரவர்.
“இசி சட்டப்படி தவறு எதுவும் செய்யவில்லை. அதனால் கோரிக்கைகளுக்குப் பணிந்து பதவி விலகாது”, என்று வான் அஹ்மட் வலியுறுத்தினார்.
அய்யய்யோ… அது மானமுள்ளவன் செய்யக்கூடியது; அதை நீங்கள் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா என்ன! நம்மால்தான் பதவி இல்லாமல் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாதே…! எல்லா ஜெகதாலங்களையும் காட்டி பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பதில்தானே நமது திறமை அடங்கியுள்ளது…! இப்படி உயிர்வாழ்வதைவிட சாவது மேல்.
சுடு சொரணை இல்லாத ஜென்மங்கள்….
உப்பு போட்டு சோறு சாபிட்டால்தானே, சூடு சொரணை எல்லாம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்.