சுமத்ரா காட்டுத் தீ தொடர்பில் இருவர் கைது

Riau hazeசுமத்ராவில் நிலத்தை துப்புரவு செய்யும் பொருட்டு சட்டவிரோதமாக தீயை  மூட்டியதற்காக இரண்டு குடியானவர்களை இந்தோனிசியப் போலீசார் கைது  செய்துள்ளனர்.

கடந்த பல நாட்களாக அண்டை நாடுகளான சிங்கப்பூரையும் மலேசியாவையும்  புகை மூட்டம் சூழ்ந்துள்ள வேளையில் கைது செய்யப்பட்டுள்ள முதல் நபர்கள்  அவர்கள் ஆவர்.

காற்றுத் தூய்மைக் கேட்டுக்கு பொறுப்பானவை அரசாங்கம் சந்தேகிக்கும் எட்டு  நிறுவனங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை எனப் போலீசார் கூறினர்.

“அந்தக் குடியானவர்கள் இருவரும் தங்கள் சொந்த நிலத்தைத் துப்புரவு செய்து  கொண்டிருந்தனர்,” என போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தோனிசிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக காட்டுத் தீயை மூட்டுகின்ற  நிறுவனத்துக்கு அல்லது நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 5  பில்லியன் ரூப்பியா (503,800 அமெரிக்க டாலர்)வரையில் அபராதமும்  விதிக்கப்படலாம்.

ராய்ட்டர்ஸ்