‘ஜோங்கர் சாலை இரவுச்சந்தை மூடப்பட்டதற்கு அரசியல்தான் காரணம்’

1 jonker1மலாக்கா மாநகரில் ஜோங்கர் சாலையில் நடைபெற்று வந்த வாரஇறுதி இரவுச் சந்தை மூடப்பட்டது பொதுத் தேர்தலில் “மாற்றரசுக் கட்சியை ஆதரித்த சீன வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் பதிலடி” என வருணிக்கப்பட்டுள்ளது.

“ இந்நடவடிக்கை மக்களை மேலும் அந்நியப்படுத்தும்”, என டிஏபி-இன் கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் சின் சூங் சியோங் கூறினார்.

பொதுத் தேர்தலில் மசீசவின் படுதோல்வியை  அடுத்து அந்த இரவுச் சந்தையை மூட முடிவு செய்யப்பட்டதாக மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன் கூறியிருப்பது  எவ்வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.

நேற்றிரவு சுமார் 100 அங்காடி வியாபாரிகள் கூடி இரவுச் சந்தை மூடப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இனி அங்கு இரவுச் சந்தை இல்லை என்று மாநில அரசு அறிவித்திருந்தாலும்  வெள்ளிக்கிழமை இரவு அங்கு வழக்கம்போல் வியாபாரம் செய்யப்போவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.