தேசிய சமரசம் பற்றிப் பேசுவதற்குமுன் மாற்றரசுக் கட்சி 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
“அரசாங்கம் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் அமைக்க எண்ணுகிறது. அதில் இனம், சமயம், கொள்கை போன்ற விவகாரங்களை விவாதிக்கலாம். ஆனால், முதலில் முடிவுகளை ஏற்க வேண்டும்.”
கேள்வி நேரத்தின்போது லிம் கிட் சியாங்கின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
நீ வேலைக்கு போனால்தான் சோறு ,இல்லைன்னா சோறு கிடையாது ,நீ ஒட்டு போட்டால் அரசியல் வாதிகளுக்கு சோறு ,நீ ஒட்டு போடா வில்லை என்றாலும் அரசியல் வாதிக்கு சோறு ,புத்தி இருந்தால் பிழைத்து கொள் மனிதா
நஜிப் அவர்களை நான் ,நேர்மையானவர் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ,நடிகர்களை நம்புவதை வீட ,,எதிரிகளை நம்பலாம் .என்ன செய்வது ,எல்லாம் தலைஎழுத்து படிதான் நடக்கும்
ஆப்பு அடிக்க தயார், அதனால் குனியச் சொல்கிறாரா? மக்கள் கூட்டணி மக்களுக்கு துரோகம் செய்யாது என் நம்புகிறோம்
“இனம், சமயம் கொள்கை போன்ற விவகாரங்களை விவாதிக்கலாம்” என்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே! நீங்கள் இதுவரை சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. அப்புறம் உங்களை எப்படி நம்புவது? முடிவுகளை ஏற்றுக்கொண்ட பிறகு கையை விரிப்பது உங்களுக்கு மிகவும் கைவந்த கலையாயிற்றே!
இதுக்கு தேர்தலே நடத்த தேவையில்லையே… எப்படியெல்லாம் நடிக்கிறானுங்க… மக்கள் என்ன இளிச்ச வாயர்களா? இவனுங்க திருடி தின்றதுக்கு நம்ம எல்லாரையும் கருவியாக பயன்படுத்திட்டாணுங்க …