EAIC ஆர்சிஐ பரிந்துரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டது

EAICIPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைக்குமாறு 2005ல் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ)  செய்த பரிந்துரைக்கு பதில் அளிக்கும் வகையில் EAIC என்னும் அமலாக்க  நிறுவன நேர்மை ஆணையம் அமைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அகமட்  ஸாஹிட் ஹமிடி கூறுகிறார்.

MACC என்னும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் பல சட்ட
நடைமுறைகளுக்கு ‘முரணாக’ IPCMC இருந்ததாலும் அது அமைக்கப்படவில்லை  என்றார் அவர்.

ஆர்சிஐ பரிந்துரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் EAIC அமைக்கப்பட்டது.  அத்துடன் EAIC பணிகள் எல்லா அரசாங்க நிறுவனங்களையும் உள்ளடக்கியுள்ளது  என அவர், இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

 

TAGS: