திரங்கானு கோலா பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ ரஹ்மான் மொக்தார் இன்று காலை மணி 10.18க்குக் கோலத் திரங்கானு சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனையில் காலமானார்.
நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து அவர் அந்த மருத்துவமனையில் கண்காணிப்புப் பிரிவில் ஏழு நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார்.
அம்னோவைச் சேர்ந்தவரான ஏ ரஹ்மான், சுகாதார, குடும்ப, சமூக
மேம்பாட்டுக்கான திராங்கானு ஆட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
13வது பொதுத் தேர்தல் முடிந்து இன்னும் இரண்டு மாதங்கள் நிறைவடையாத வேளையில் அவர் மரணமடைந்திருப்பதைத் தொடர்ந்து நாட்டின் முதலாவது இடைத் தேர்தல் நடைபெற வேண்டும்.
இனி ஒரு நல்லவருக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்…