மலாக்கா முதலமைச்சருடைய ஜோங்கர் சாலை அறிக்கை ‘ பொய்யானது’

jonkerஜோங்கர் சாலை சோதனை அடிப்படையில் நான்கு வாரங்களுக்கு மட்டுமே  மூடப்படும் என மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன் கூறியது ‘பொய்’ என  டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.

மலாக்கா மேயருக்கு வழங்கப்பட்ட ஒரு சுற்றறிக்கை இட்ரிஸ் அறிக்கைக்கு  முரணாக உள்ளது என அவர் இன்று மக்களவைக்கு வெளியில் நிருபர்களிடம்  கூறினார்.jonker1

ஜோங்கர் சாலை போக்குவரத்துக்கு திறந்திருக்க வேண்டும் என்றும் சோதனை  அடிப்படையில் அல்ல என்றும் மலாக்கா ஆட்சி மன்றம் வெளியிட்ட அந்தச்  சுற்றறிக்கை தெரிவித்தது.

ஆனால் அந்தச் சாலையின் எந்தப் பகுதியிலும் கடைகளை அமைப்பதற்கு  அங்காடிக்காரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்தச் சுற்றறிக்கை  கூறியது.