1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்வது மீது விவாதம் நடத்தக் கோரும் அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தள்ளுபடி செய்தார்.
பாஸ் கட்சியின் சிப்பாங் எம்பி ஹனிபா மைடின் (வலம்) செவ்வாய்க்கிழமை அத்தீர்மானத்தைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அது ஓர் அவசர விவகாரமல்ல என்று பண்டிகார் நிராகரித்தார்.
அச்சட்டத்தை அகற்றப்போவதாக அரசாங்கம் சொல்லி இருந்தாலும் எதிரணித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தேர்ந்தெடுத்த முறையில் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்படுவதாக ஹனிபா அத்தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“1948-இலிருந்து அச்சட்டம் இருக்கிறது. காலனித்துவ காலத்திலிருந்து பயன்படுத்தி வருகிறோம்”, என்றாரவர்.
அப்பதான் பிடிச்சி உள்ள தள்ள வசதியாக இருக்கும்.