தாப்பாவில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்ட கே.வசந்த குமாரிடம் உதவியாளராக இருந்த கே. முருகன், தேர்தலுக்கு முதல்நாள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் தொடர்பில் அந்தக் கொலையைப் புலன்விசாரணை செய்ய நாடாளுமன்றம் ஒரு குழுவை அமைக்க வேண்டுமென அவரின் தாயார் பி.ராஜம்மா கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதற்கான மகஜர் ஒன்றை ராஜம்மா, இன்று நாடாளுமன்ற வாயிலில் பத்து காஜா எம்பி வி.சிவகுமாரிடம் ஒப்படைத்தார்.
ஐஜிபி-இடம் நான்கு மகஜர் கொடுத்தும் பதில் இல்லை என்பதால் நாடாளுமன்றத்திடம் மகஜர் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக ராஜம்மாவுடன் வந்திருந்த வசந்த குமார் கூறினார்.
நீதி வெல்லட்டும், அநீதி அழியட்டும்.
பத்து மலை முருகா…!
முருகனின் கொலையில் நோக்கத்தையும் அதன் பின்னணியில் இருந்து செயல் பட்டவர்களை தண்டிப்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டுமே தவிரே ,பாதிக்க பட்ட குடும்பத்தை வைத்து அரசியல் நடத்துவது முறையாக இருக்காது .