லிம் குவான் எங்: ஐஜிபி எல்லாத் தடுப்புக் காவல் மரணங்கள் பற்றிய முழு விவரங்களை வழங்க வேண்டும்

PDRMஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார்  ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் இந்த ஆண்டு மே மாதம் வரையில் நிகழ்ந்த  ஏ குகன் மரணம் உட்பட அனைத்து தடுப்புக் காவல் மரணங்கள் பற்றிய முழு  விவரங்களை வழங்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான்  எங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் போலீஸ் கரங்களில் நிகழ்ந்த மரணங்களுக்குத் தாம் உடந்தை அல்ல  என்பதையும் காலித் காட்டவும் வேண்டும் என பாகான் எம்பி-யுமான லிம்  சொன்னார்.PDRM1

அப்போது தான் காலித் பொது மக்களுடைய நம்பிக்கையை மீண்டும் பெற  முடியும் என அவர் சொன்னார்.

இல்லை என்றால் அரச மலேசியப் போலீஸ் படையின் தலைவர் பதவியிலிருந்து  காலித் கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும் என லிம் கூறினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணையின் போது உடல் ரீதியாக  துன்புறுத்தப்பட்ட தடுப்புக் காவல் கைதி குகன் மரணத்துக்கு ‘காலித் பொறுப்பு’  என சிவில் வழக்கு ஒன்றில் புதன்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.