மெகா கோபுரத் திட்டத்தை எதிர்க்க பல அமைப்புக்கள் தயாராகின்றன

megaஅண்மையில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 118  மாடி மெகா கோபுரக் கட்டிடம் மீது நோட்டீஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து  அதற்கு, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் கடுமையாக ஆட்சேபம்  தெரிவித்துள்ளனர்.mega1

அந்த மெகா திட்டத்துக்கான வரைபடத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பம்  கிடைக்கப் பெற்றுள்ளதாக மாநகர மேயர் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

mega2அந்த நிலத்தின் பயன்பாட்டை திறந்த வெளி, கல்வி அமைப்புக்கள் என்ற
நிலையிலிருந்து வர்த்தகமாக மாற்றுவது அதில் சம்பந்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பதில் கொடுப்பதற்கு 14 நாட்கள் அவகாசம்  கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று நிருபர்களைச் சந்தித்த Pertahankan Taman Merdeka Negara (PTMN)
அமைப்பின் உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், அரசு சாரா  அமைப்புக்களின் பேராளர்கள் எதிர்க்கட்சிகளின் பேராளர்கள் ஆகியோர் மெகா  கோபுரத் திட்டம் குறித்து கவலை தெரிவித்தனர்.

அந்தத் திட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்தால் பெரிய அளவில் பேரணி நடத்தப்  போவதாக PTMN உதவித் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிமும் பத்து எம்பி  தியான் சுவாவும் சூளுரைத்தனர்.