ஜோங்கர் சாலையை சோதனை அடிப்படையில் நான்கு வாரங்களுக்குப் போக்குவரத்துக்குத் திறந்து வைப்பது சரி ஆனால், அதன்பின்னர் வார இறுதிகளில் போக்குவரத்துக்கு அது மூடப்பட வேண்டும் என்று விரும்புகிறார் சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ்.
சுற்றுலாத் தொழில் மலாக்காவுக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழில் என்பதையும் ஜோங்கர் சாலை சுற்றுப்பயணிகள் ‘கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய” இடங்களில் ஒன்று என்பதையும் முதலமைச்சர் இட்ரிஸ் ஹருனுக்கு தாம் அறிவுறுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
“அதன் பெயரே ‘Jonker Walk’தான். அதாவது ஒரு நடைபாதை”.
அது மக்கள் நடப்பதற்கு வசதியாக இருக்க வேண்டுமே தவிர காரோடுவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்றாரவர்.