பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் புதிய கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து கவர்னர் ஆற்றிய உரை முதலைமைச்சர் லிம் குவான் எங்-கின் சொற்பொழிவுகளைப் போன்று இருந்ததாக அந்த மாநில அம்னோ கூறிக் கொண்டுள்ளது.
“மக்கள் வாக்குகள்’ ஏஇஎஸ் (Agenda Ekonomi Saksama) போன்ற சொற்கள் லிம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என புலாவ் பெத்தோங் சட்டமன்ற உறுப்பினர் பாரிட் சைட் கூறினார்.
“அது பிரச்னை அல்ல என்றாலும் லிம் கண்ணைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் மீது பழி போடுகிறார்,” என பாரிட் சட்டமன்றக் கட்டிடத்தில் நிருபர்களிடம் சொன்னார்.
கவர்னர் அப்துல் ரஹ்மான் அபாஸ் தமது உரையில் மே 5 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற மாநில அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.
உண்மையை பேசினால் உங்களுக்கு பொறுக்காதே…