பாஸ், ஜூலை 24-இல் நடைபெறவுள்ள கோலா பெசுட் இடைத் தேர்தலில் அதன் பரப்புரை இயக்குனராக உதவி தலைவர் ஹுசாம் மூசாவை நியமனம் செய்துள்ளது.
அக்கட்சியின் நாளேடான ஹராகா டெய்லி இத்தகவலைத் தெரிவித்தது.
பாஸ், இடைத் தேர்தலுக்கான அதன் வேட்பாளரை இன்றிரவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎன் வேட்பாளர் யார் என்பது இன்று பிற்பகல் தெரியவரும்.
கடந்த பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் பிஎன் 2,434 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றது