பேரரசருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவை மே 5 பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறும் பகுதியை அகற்ற வேண்டும் என பக்காத்தான் ரக்யாட் முன்மொழிந்துள்ளது.
அப்பகுதியை அகற்றாவிட்டால் தேர்தல் முடிவுகள் மீது செய்யப்பட்டுள்ள முறையீடுகளுக்கு அர்த்தமில்லாமல் போகும் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். தீர்மானத்தின் மற்ற பகுதிகளை பக்காத்தான் அப்படியே ஏற்றுக்கொள்கிறது.
பக்காத்தான், பிஎன் இரண்டுமே பல நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகளை எதிர்த்து முறையீடு செய்துள்ளன.