கோலா பெசுட் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனப் பாஸ் கட்சியைக் கேட்டுக் கொள்ளும் இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜுசோ ‘ஆணவம் பிடித்தவர்’ என அந்த இடைத் தேர்தலுக்கான பாஸ் தேர்தல் இயக்குநர் ஹுசாம் மூசா வருணித்துள்ளார்.
“அது உண்மையில் ஆணவமான அறிக்கை,” என ஹுசாம் இன்று நிருபர்களிடம் சொன்னார்.
வரும் இடைத் தேர்தலில் பிஎன் பெரும்பான்மை கூடும் என இட்ரிஸ் கூறிக் கொண்ட போதிலும் அந்தச் சட்டமன்றத் தொகுதியில் பாஸ் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் ஹுசாம் தெரிவித்தார்.