இந்து, கிறிஸ்துவ நாகரீகங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

‘பொதுக் கல்வியை கொஞ்சம் கூட திருத்த முடியாத அளவுக்கு பாழாக்கி விட்ட  பின்னர் அடுத்தது தனியார் கல்வியிலும் அவ்வாறு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது’

இஸ்லாமிய நாகரீகம்’ தனியார் பல்கலைக்கழகங்களில் கட்டாயப் பாடம்

பிரிமுஸ்: நாகரீகம் பற்றிய பாடங்களுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் ஏன்  ‘இஸ்லாமிய நாகரீகத்தை’ மட்டும் படிக்க வேண்டும் ? நாகரீகங்களை அறிந்து  கொள்வது அவசியம் எனத் தெரிந்தால் அமைச்சர் மாணவர்களுக்கு கூடுதல்  வாய்ப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

தென் கிழக்காசியாவின் பண்டை கால வரலாறு பற்றி நாம் அதிகம் அறிந்து  கொள்ள அந்தப் பாடம் உதவக் கூடும்.

கெட்டிக்கார வாக்காளன்: பல்கலைக்கழகக் கல்வி என்பது முழுமையானதாக  இருக்க வேண்டும். அந்த அனுபவம் மாணவர்களுக்குக் கூடுதல் சுதந்திரத்தைக்  கொடுக்க வேண்டும்.

இஸ்லாமிய நாகரீகம் பற்றி ஒவ்வொரு மாணவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்  என்றால் அவர்களுக்கு வேறு வாய்ப்புக்களும் கொடுக்கப்பட வேண்டும். தரம்  குறைந்த பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக தனியார்  பல்கலைக்கழகங்களையும் கொண்டு செல்வது பின்னோக்கிச் செல்வதாகும்.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: ஒரு சமயத்தை பற்றியும் நாகரீகம் மீதான அதன்  தாக்கத்தையும் அறிந்து கொள்வதும் நல்ல விஷயமாகும். ஆனால் அது  பெரும்பான்மையினருக்கும் அமல் செய்யப்பட வேண்டும்.

இந்து, கிறிஸ்துவ நாகரீகங்களைப் பற்றி கற்றுக் கொள்ளலாமே ?
முஸ்லிம்களிடையே சமய உணர்வு வலுவாக உள்ளது. அதனால் இந்து, கிறிஸ்துவ  சமயங்களை அறிந்து கொள்வதால் அவர்கள் இந்துக்களாகவோ  கிறிஸ்துவர்களாகவோ மாறப் போவதில்லை. நாம் நியாயமாக நடந்து கொள்ள  வேண்டும்.

அபாஸிர்: பொதுக் கல்வியை கொஞ்சம் கூட திருத்த முடியாத அளவுக்கு பாழாக்கி  விட்ட பின்னர் அடுத்தது தனியார் கல்வியிலும் அவ்வாறு செய்ய வேண்டிய நேரம்  வந்து விட்டது.

ஜிஜிஜி: இது நாட்டின் எதிர்காலத்தை அரசியலாக்குவதற்கு சமமாகும். பாஸ்  கட்சியையும் பிகேஆர் கட்சியையும் இக்கட்டான சூழ்நிலையில் அது வைக்கிறது.

இன, சமய எல்லைகளைக் கடந்த வலுவான தலைவர் ஒருவரை நாடு பெறும்  வரையில் இந்த நாட்டுக்கு நல்ல எதிர்காலம் இல்லை என நான் எண்ணுகிறேன்.

சிவிக்: உண்மையாகச் சொன்னால் இஸ்லாமிய நாகரீகம் கற்பதற்கு நல்ல  பாடமாகும். நான் ஆறாம் படிவத்தில் அதனைக் கற்றேன். அது மலேசிய  வரலாற்றைக் காட்டிலும் ஆர்வமிக்கதாக இருந்தது. அதில் ஏதும்  கலக்கப்படவில்லை என்றால் அந்த அறிவாற்றல் எந்தப் பாதிப்பையும்  ஏற்படுத்தாது.

 

TAGS: