அம்பிகா இல்லாவிட்டாலும் பெர்சே 4.0 பற்றி சிந்திக்கப்படும்

ambigaபெர்சே அமைப்பை நடப்பு இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வழி  நடத்துகிறோரோ இல்லையோ வாக்காளர் பட்டியல் தூய்மை செய்யப்படுவதை  உறுதி செய்ய பெர்சே 4.0 பேரணி நடத்தப்படும் என அந்த தேர்தல் சீர்திருத்த  போராட்ட அமைப்பு கூறுகின்றது.

வாக்காளர் பட்டியல் தூய்மை செய்யப்படுவது முக்கியம் என வலியுறுத்திய அவர்,  அதனை இப்போது செய்யா விட்டால் அடுத்த இரண்டு தேர்தல்களுக்கு  சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியலுடன் தான் வாழ வேண்டியிருக்கும் எனச்  சொன்னார்.

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் அம்பிகா நிருபர்களைச் சந்தித்தார்.

தேர்தல் தொகுதிகள் மறுநிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னர் தூய்மையான  வாக்காளர் பட்டியல் முக்கியமான விஷயமாகும் என்றார் அவர். அது குறித்து  விளக்குவதற்காக பெர்சே நாடு முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்தும்  என்றும் அவர் தெரிவித்தார்.

பெர்சே 2.0ன் தலைமைத்துவத்திலிருந்து தாம் விலகக் கூடும் என அம்பிகா  ஏற்கனவே அறிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவது தான்  பெர்சே 2.0 உடனடிப் பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.