வாக்காளர் பட்டியலை எதிர்த்து வழக்குப் போடுவதின் மூலம் தேர்தல் நடைமுறையை தேக்கி வைக்க மக்கள் முயலுவதை தடுக்க தேர்தல் சட்டத்தின் பிரிவு 9ஏ தேவைப்படுவதாக தேர்தல ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் சொல்கிறார்.
“வாக்காளர் பட்டியலை எதிர்த்து வழக்காடுவதற்கு நாம் திறந்து விட்டால் நாம் எப்படி தேர்தலை நடத்த முடியும்,” என அவர் கோலா பெசுட்டில் நிருபர்களிடம் கூறினார்.
‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்றால் வாக்காளர் பட்டியலை நீதிமன்றங்களுடைய ஆய்வுக்கு இசி திறந்து விட வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் விடுத்துள்ள சவாலுக்கு வான் அகமட் பதில் அளித்தார்.
வாக்காளர் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் அதனை நீதிமன்றங்கள் ஆய்வு செய்வதை தேர்தல் சட்டத்தின் பிரிவு 9ஏ தடை செய்கின்றது.