சிறையில் உள்ள இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் மருத்துவ தேவைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்று கூறிய அவரின் துணைவியார் எஸ். இந்திரா தேவி, அதனால் உதயா முடக்குவாதத்தால் பாதிக்கப்படலாம் என்று கவலை கொண்டுள்ளார்.
இன்று பிரிக்பீல்ட்சில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய இந்திரா, தம் கணவர் கடுமையான முதுகுவலியை உண்டுபண்ணும் முதுகுத்தண்டு தட்டுப்பிதுக்கத்தால் (prolapsed disc) பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றார். உதயாவுக்கு நீரிழிவு நோயும் உண்டு.
“அவருக்கு வலி மாத்திரைகளைத்தான் கொடுக்கிறார்கள். நீரிழிவு நோயாளிக்கு வலி மாத்திரைகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டால் சிறுநீரகம் செயலிழந்து போகும்.
“அவரை யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்குத்தான் தெரியும் அவருக்கு என்ன மருந்து தேவை என்பது”, என்றாரவர்.
இன்று நாம் காணும் சில மாற்றங்களுக்கு அவரே காராம் .. அவருக்கு உதவ வேண்டும்
இது உண்மையானால் , கண்டிக்கப்பட வேண்டிய விசயமாகும். யாராக இருந்தாலும் தனி மனித உரிமை காக்கப்பட வேண்டும்.
உதயாவின் சிறை வாழ்க்கை பற்றி, எவரேனும் நினைத்து பார்க்க போவதில்லை ? பாவம் அவரின் நிலை? வேதாவை போல் காலம் அறிந்து வாழ தெரியாதவர். தமிழ் சமுதாயம் தியாகிகளையும், போராட்டவாதிகளையும், என்றும் போற்றுவதும் இல்லை. தமிழனின் உழைப்பும், திறமையும், தியாகமும், நேர்மையும், சிலரின் சுயநலத்தினாலும், ஒற்றுமை இன்மையினாலும், சர்வதேச சமூகத்தில் அந்தஸ்து இழந்து அல்லாடுகிறது.
ஆனாலும் வரலாறு பதிவு செய்து வருகின்ற தலைமுறைக்குப் பாடம் புகட்டும்.
திமிழினத்தின் ஒற்றுமை எவ்வளவு முக்கியமென்பதை உலகத் தமிழினம் ஒரு பாடமாகப் படிக்கும் வாய்ப்பை மலேசியாவில் பி .உதயகுமார் உருவாக்கியுள்ளதை யாராலும் மறக்க முடியாது.
அதன் எதிர்விளைவு கட்டாயம் உருவாகும்.
அவர் கடந்த தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால் கொஞ்சம் மானம் மரியாதையோடு இருக்கலாம் ! ஹிண்ட்ராப் சேவையால் கிடைத்த மரியாதையை அவரே கெடுத்துவிட்டார் ! வேதா செய்த மக்களை முட்டாளாக்கும் சூழ்ச்சி இன்று பிரதமர் துறையில் சிவன் கழுத்திலுள்ள பாம்பாக மாறிவிட்டார் ! 14 வது தேர்தலில் உதயாவும் BN பக்கம் போகமாட்டார் என்று யாராவது உறுதி கூற முடியுமா ?