மூன்று நடப்பு அம்னோ உதவித் தலைவர்களும் எதிர்வரும் கட்சித் தேர்தலில் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடுவர் என உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
“என் நிலை தெளிவானது. நான் பதவியை நிலை நிறுத்திக் கொள்ள
களமிறங்குவேன்,” என மூன்று உதவித் தலைவர்களில் ஒருவரான அவர் சொன்னார்.
தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகமட் ஷாபீ அப்டால் ஆகியோர் மற்ற நடப்பு உதவித் தலைவர்கள்.
அந்த மூவரும் போட்டிகளை எதிர்நோக்கவும் தயாராக இருப்பதாகவும் அகமட் ஸாஹிட் சொன்னார்.