‘அம்னோ பதவிகளுக்குப் போட்டி வேண்டாம்’

umnoகடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஆகஸ்ட் 30 வரை நிகழும் அம்னோ கிளைத்  தேர்தல்களில் ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்ப்பதற்கு கலந்துரையாடல் வழி  உயர் பதவிகளை முடிவு செய்யுமாறு கட்சி உறுப்பினர்களை அம்னோ தலைமைச்  செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்னோ இஸ்லாத்தை நிலை நிறுத்தி, தற்காத்து, மேம்படுத்தி வரும் கட்சி என்பது  உட்பட பல அம்சங்களை வலியுறுத்தும் கட்சி அமைப்பு விதிகளில் 3வது பிரிவுக்கு  இணங்க உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

“ஆகவே இஸ்லாமியக் கோட்பாடுகள் அடிப்படையில் உங்களுக்கு இடையில்  விவாதித்து யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதையும் மற்ற பதவிகளையும்  முடிவு செய்து கொள்ளுங்கள்.”

அவர் நேற்று கோலாலம்பூரில் தாமான் கோபேனாவில் As-Sodiqin சூராவில்  நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவ்வாறு கூறினார்.