குளியலறை ‘கேண்டீன்’ ரமதான் உணர்வை காட்டவில்லை

news23713c“நீங்கள் கட்டாயம் என்றால் நோன்பு இருங்கள். ஆனால் முஸ்லிம் அல்லாத  மாணவர்கள் உணவு உட்கொள்வதற்கு கேண்டீனைப் பயன்படுத்துவதை ஏன்  தடுக்கின்றீர்கள் ?”

குளியலறையில் சாப்பிடுமாறு மாணவர்களை பள்ளிக்கூடம் ‘கட்டாயப்படுத்தியது’

அடையாளம் இல்லாதவன்#708871335: முஸ்லிம் அல்லாத மாணவர்கள்  சாப்பிடுவதற்கு பொருத்தமான இடத்தை பள்ளிக்கூடம் வழங்கியிருக்க வேண்டும்.  கழிப்பறைக்கு அடுத்து உள்ள குளியலறையை ‘கேண்டீனாக’ மாற்றியிருக்கக்  கூடாது.

நோன்பு மாதத்தில் முஸ்லிம் மாணவர்கள் ‘கேண்டீனுக்கு’ போக மாட்டார்கள்  என்பதால் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் அந்த ‘கேண்டீனில்’ உணவு  உட்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அடையாளம் இல்லாதவன்#22065633: தகுதியே இல்லாத கல்வியாளர் ஒருவர்  செய்த இந்த முடிவு ஒரே ஒரு சம்பவமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

அந்தக் கல்வியாளருக்கு தார்மீகப் பொறுப்புக்களை உணர்த்த வேண்டிய நேரம்  இது.

அது3: இந்த விவகாரம் நடந்து விட்டது. அதிகாரிகள் அதனை விரைவில் தீர்க்க  வேண்டும். இல்லை என்றால் இது இன்னொரு இனவாதப் பிரச்னையாகி விடும்.   எல்லா இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் பரஸ்பரம் மரியாதை  அவசியமாகும்.

சிவிக்: இஸ்லாம் என்ற பெயரில் தீவிரமான நடவடிக்கைகளில்  சிலர் ஈடுபடுவதற்கு  பிஎன் அரசாங்கம் அனுமதித்ததால் தான் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன.

மூவாக்: நீங்கள் நோன்பு இருப்பதால் உங்கள் சமயத்தைச் சாராதவர்களை நீங்கள்  அழுக்கு என நினைக்கக் கூடாது. பள்ளிக்கூட ‘கேண்டீனை’   பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு.

இது போன்ற ஆணையை பள்ளிக்கூட நிர்வாகி பிறப்பிக்க வேண்டிய அவசியம்  என்ன ? அந்த மனிதர் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் மன்னிப்புக்  கேட்டுக் கொள்ள வேண்டும். இது போன்ற மூளையில்லாத காரியத்துக்காக அவர்  மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும்.

அவர் ஒய்வூதியம் இல்லாமல் உடனடியாக நீக்கப்பட வேண்டும். மலேசியாவில்  பொதுப் பள்ளிக்கூட முறையின் தரம் வீழ்ச்சி காண்பதற்கு இது போன்ற  கல்வியாளர்களே காரணம்.

செண்டோல் பீன்: முஸ்லிம் என்ற முறையில் உங்கள் அனைவரிடமும் நான்  மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எங்களை செய்யுமாறு இஸ்லாம்  சொல்லியிருப்பது இது அல்ல. நமது ஆட்சியாளர்கள் உட்பட சில முட்டாள்கள்  சமயத்தைக் கடத்தி அதனை சீரழித்து விட்டனர்.

இவன்ஸ்டீவன்: நீங்கள் கட்டாயம் என்றால் நோன்பு இருங்கள். ஆனால் முஸ்லிம்  அல்லாத மாணவர்கள் உணவு உட்கொள்வதற்கு கேண்டீனைப் பயன்படுத்துவதை  ஏன் தடுக்கின்றீர்கள் ?

சாதாரண மலேசியன்: நமது பிள்ளைகளுக்கு கல்வி அறிவு ஊட்டுவதற்கு நாம்  நம்புகின்றவர்களுடைய திறமைக் குறைவை இது காட்டுகின்றது. பொதுக் கல்வி  முறைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதால் வந்த வினை தான் இது. எல்லாம்  போதும் போதும். இனவாத அரசியலால் எல்லா மலேசியர்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியாயமானவன்: தங்கள் பிள்ளைகளை தாய்மொழிப் பள்ளிக்கூடங்களுக்குப் பதில்  மலாய்ப் பள்ளிகளுக்கு அனுப்புவதா வேண்டாமா என மலாய்க்காரர்  அல்லாதவர்கள் சிந்திப்பதற்கு நேரம் வந்து விட்டது. மலாய் ‘மேலாதிக்க’ உணர்வு  அதிகரிக்கும் போது நிலைமை மேலும் மோசமாகும்.

“என்னுடைய தான் சிறந்தது, மற்றது எல்லாம் மோசமானது” என்னும் சிந்தனையைக் கொண்ட பல இரண்டாம் தர ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டமானது. அவர்கள் பிடிஎன்  என்ற தேசிய குடியியல் பிரிவால் உருவாக்கப்பட்டவர்கள்.

TAGS: