தலைமறைவாக இருக்கும் போலீஸ்காரர்- அவர் மாட்டி விடப்பட்டாரா ?

hare‘இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் நீங்கள் நிரபராதி என்றால் ஏன் சட்டத்திலிருந்து  விலகி ஒடுகின்றீர்கள் ? நீங்கள் மாட்டி விடப்பட்டிருந்தால் வழக்குரைஞர்  ஒருவரை நாடுங்கள். உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்’

தடுப்புக் காவல் மரணத்தில் சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் தமக்கு எதுவும்  தெரியாது என்கிறார்

சீ3: என் தர்மேந்திரன் மரணத்துக்கு யார் உண்மையில் பொறுப்பானவர்கள் என்பது  தமக்குத் தெரியும் என இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் கூறிக் கொண்டால் அவர்  விரைவாக வெளியில் வந்து தம்மை தூய்மையானவர் எனக் காட்ட வேண்டும்.

தமக்கு நியாயமான விசாரணை கிடைக்கும் என அவர் போலீஸ் படையை  நம்பாவிட்டால் மாற்று ஊடகங்கள் போன்ற மற்ற வழிகளை நாடலாமே.

அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் குற்றம் செய்த தரப்புக்கள் அவர் மீது  கொலைக் குற்றம் சாட்டுவது எளிதாகி விடும்.

அமைதியாளன்: இந்த விளக்கத்தைக் கொடுக்க ஹரி கிருஷ்ணனுக்கு நீண்ட  காலமாகி விட்டது. ஆதாரங்கள் ஜோடிக்கப்படுகின்றன என்ற சந்தேகத்தை அது  எழுப்பியுள்ளது. தாம் நிரபராதி என்றால் ஏன் அவர் தலைமறைவாக இருக்கிறார்
?

தமது போலீஸ் சகாக்களிடம் சரணடைந்தால் அவர்களை நம்ப முடியாது என  அவர் எண்ணுகிறாரா ? ஹரி நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். இல்லை  என்றால் உங்கள் மீதான நம்பிக்கை போய் விடும்.

லவர் பாய்: தர்மேந்திரன் விவகாரத்தைக் காட்டிலும் தமது உயிருக்கு மருட்டல்  ஏற்பட்டுள்ளது பற்றியே ஹரி கிருஷ்ணன் அதிகம் கவலைப்படுவதாக நான்  கருதுகிறேன். அவர் தலைமறைவானதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.

அடையாளம் இல்லாதவன்#33877536: இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் நீங்கள்  நிரபராதி என்றால் ஏன் சட்டத்திலிருந்து விலகி ஒடுகின்றீர்கள் ? நீங்கள் மாட்டி  விடப்பட்டிருந்தால் வழக்குரைஞர் ஒருவரை நாடுங்கள். உங்களைத் தற்காத்துக்  கொள்ளுங்கள்.

அது வரையில் மக்கள் உங்களை குற்றவாளி என்று தான் எண்ணுவார்கள். ஆகவே  சரணடைந்து விடுங்கள்.

சபாக்காரன்: இந்தியர்கள் சம்பந்தப்பட்ட தடுப்புக் காவல் மரணங்களில் இந்திய  போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்படுவது வினோதமாக இருக்கிறது.  இந்திய போலீஸ் அதிகாரிகள் நிறைய இருக்கின்றனரா- அவர்கள் எல்லாம்  குண்டர்களா ?

இந்தியர்கள் மாட்டிவிடப்படுவதாக என உள்மனம் சொல்கிறது. அவர்கள் போலீஸ்  அதிகாரிகளாக இருந்தாலும் அல்லது குண்டர்களா இருந்தாலும் எந்த வேறுபாடும்  இல்லை.

எஸ்எஸ் டாலிவால்: பெரும்பாலும் ஹரி கிருஷ்ணன் பலி ஆடாக இருக்க  வேண்டும்.

RakyatBiasa: ஹரி கிருஷ்ணன் இந்திய திரைப்பட வில்லனைப் போல
தோற்றமளிக்கிறார். நீங்கள் உண்மையில் நிரபராதி என்றால் ‘யார் அவரை  அடித்தார்கள், யார் அங்கு இருந்தார்கள், யாருக்கு அது குறித்து தெரியும்’  என்பதை வெளியிடுங்கள். கோழையாக இருக்க வேண்டாம்.

 

 

TAGS: