குளியலறை கேண்டீன் சர்ச்சை தொடர்பான படங்களை வெளியிட்ட தாய்க்கு கடத்தல் மருட்டல்கள் வந்துள்ளன. அதே வேளையில் ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியில் உள்ள அவரது புதல்வியை வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் கேலி செய்கின்றனர்.
தமது சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தப் போவதாகவும் புதல்வியைக் கடத்தப் போவதாகவும் அடையாளம் தெரியாத தனிநபர்கள் தொலைபேசி வழி தம்மை மருட்டுவதாக குணேஸ்வரி கெல்லி என்ற அந்தத் தாய் சொன்னதாக சன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த மருட்டல்கள் தொடர்பில் தாம் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் முகநூலில் அந்தப் படங்களைச் சேர்த்த குணேஸ்வரி சொன்னார்.
பள்ளிக்கூட்டத்தில் தாம் கேலி செய்யப்படுவதால் தமது 9 வயது புதல்வி சோர்ந்து போயிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த விஷயத்தை இனம், சமயம் சம்பந்தப்பட்ட விவகாரமாக்க தாம் ஒரு போது எண்ணியதில்லை என வலியுறுத்திய அந்தத் தாய், குளியலறையில் பிள்ளைகள் உணவை உட்கொள்ளும் போது ஏற்படக் கூடிய உடல் ஆரோக்கியப் பிரச்னைகள் பற்றியே தாம் கவலைப்பட்டதாக தெரிவித்தார்.
அந்தப் பள்ளிக்கூடத்திற்கு எதிராக குணேஸ்வரியும் போலீசில் புகார் செய்துள்ளார். அதனையும் சேர்த்து இது வரை மொத்தம் 14 புகார்கள் பள்ளிக்கூடத்துக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளன.
உண்மை பிரச்சனை என்ன என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டியதே ஒழிய, மாணவர்களின் நலத்தில் அக்கறை காட்டிய ஒரு தாய்க்கு கொலை மிரட்டல் விடுவது அவன் ஆண்மைக்கு அழகல்ல சமமாகும்…. உமது பிள்ளைக்கு இந்நிலை ஏற்பட்டிருந்தால் நீர் சும்மா இருத்திருப்பீரா?
இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிப்புட்டன்………..!
உண்மை பிரச்சனை என்ன என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டியதே ஒழிய, மாணவர்களின் நலத்தில் அக்கறை காட்டிய ஒரு தாய்க்கு கொலை மிரட்டல் விடுவது அவன் ஆண்மைக்கு அழகல்ல… அலிக்கு (போண்டான்) சமமாகும்…. உமது பிள்ளைக்கு இந்நிலை ஏற்பட்டிருந்தால் நீர் சும்மா இருத்திருப்பீரா?
குலைக்கும் நாய் கடிக்காது என்பார்கள். கவலைபடாதே தாயே. எல்லாம் நன்மைக்கே என்று நிமிர்ந்து நட.
மாணவர்களை இழிவு படுத்தியவர்களுக்கு ஒன்றும் அல்ல ஆனால் கடமையைச் செய்த தாய்க்கு கடத்தல் மிரட்டலா ..? நியாயம் இங்கு வெல்லவில்லை ஆனால் அநியாயம் தான் வெல்லுகிறது.. எது நடந்தாலும் எங்கள் ஆதரவு என்றும் உண்டு திருமதி.குணேஸ்வரிக்கும் தமிழர்களுக்கும்..
இன வெறி பிடித்த நாடாக மாறிவரும் மலேசியாவை இனி திருத்த முடியாது!
இது ஒரு பக்கம் இருக்க …சுங்கை buloh சரஸ்வதி தமிழ் பள்ளியில் சிற்றுண்டி சாலை இருந்தும் அது சுகாதாரம் இல்லாமலும் ..மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை மிக மிக மோசமான நிலையில் இருக்கிறது.. இதை யார் கேட்பது…
சுங்கை பூலோ சரஸ்வதி பள்ளியின் சிற்றுண்டி சாலை, கழிவறை சிறிய தொகை செலவு செய்ய வேண்டும். மா.இ.கா வினர் அக்கறை கட்டமாட்டார்கள் ஒரு பெரிய கட்டடம் கட்ட வேண்டும் என்றால் நான் நீ என்று போட்டி போடுவார்கள். தமிழ் பள்ளி எப்படி போனால் எனக்கு என்ன? என் பிள்ளைகள் தமிழ் பள்ளியில் படிக்கவில்லை என்று கமலநாதன் போன்றவர்கள் நினைப்பார்கள்.
பரிசானை வழிநடத்தும் ஒரு கட்சிக்கு பின்னால் கூக்குரல் எழுப்பும் ஒரு இனத்தை சேர்ந்த எடுபிடியாட்களா இருக்கலாம்…..!
இனிமேலாவது நம் பிள்ளைகளை நம் தமிழ் பள்ளிகளுக்கு
அனுப்புங்கள். இனிமேலாவது திருந்துங்கள். ஈகோ வேண்டாம்!
பாசம், அன்பு மற்றும் தரம் நம் தமிழ் பள்ளிகளிலேதான் இருக்கு!
அப்புறம் ஏன் இந்த சந்தேகம்?
காவல் அதிகாரி தெய்வீகன் நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் ..!
நம்மவர்களுக்கு இழிவு நடந்தது ….!
பாதுகாப்பது உங்கள் கடமை !