கிராமத் தலைவர்: அது லஞ்சம் அல்ல. வெறும் ஊக்குவிப்புத் தான்

Besutகோலா பெசுட் இடைத் தேர்தல் தினத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக  கூறப்படுவதை கம்போங் பெரிஸ் லாம்பு கிராமத் தலைவர் யாகோப் காதிர்  மறுத்துள்ளார்.

“அது லஞ்சம் என்றால் மிக அமைதியாக செய்யப்பட்டிருக்கும். நாங்கள் பிஎன்  -னுக்கு வாக்களித்தவர்களுக்கும் பாஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கும்  வேறுபாடின்றி நாங்கள் அந்த ஊக்குவிப்பைக் கொடுத்தோம். திரும்பும்  வாக்காளர்கள் நிச்சயம் பாஸ் கட்சியை ஆதரித்திருப்பர்,” என அவர்  மலேசியாகினியிடம் இன்று காலை கூறினார்.Besut1

புதன் கிழமையன்று கோலா பெசுட்டில் வாக்களிப்பு நிகழ்ந்த வேளையில் ரொக்கப்  பணத்தைப் பெறுவதற்காக யாக்கோப் இல்லத்திற்கு வெளியிலும் கம்போங் லே  அவுட் தலைவர் ரஷீட யூசோப் (ஏற்கனவே ‘ராஜிஸ்’ என அறிவிக்கப்பட்டது)  வீட்டுக்கு வெளியிலும் வாக்காளர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்ததைக் காண  முடிந்தது.

அவர்கள் பணத்தை பெறுவதற்கு செல்லும் முன்னர் வாக்களித்து விட்டனர்.  வாக்களிக்கத் திரும்பியதற்காக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட போக்குவரத்து  அலவன்ஸ் என அவர்கள் மலேசியாகினியிடம் கூறினர்.