(கா.ஆறுமுகம், சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர், தமிழ் அறவாரிய ஆலோசகர்)
மொழி அளவிலான பள்ளிகள் நாட்டில் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் இந்நாட்டிலுள்ள தமிழ், சீனப்பள்ளிகளை மூடிவிட்டு ஒரே மொழி பள்ளிகளை உருவாக்கும் வகையில் நாட்டின் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட வேண்டுமென பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஸாராயின் முகமட் ஹாஷிம் நேற்று மக்களைவையில் தெரிவித்துள்ளார்.
சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளை மூடிவிட்டால் நம் நாட்டில் தேசிய ஒருமைபாடு இன்னும் சிறப்பாக இருக்காது. மாறாக ஒற்றுமை சீர்குலைய அது வழிவகுக்கும்.
நம் நாட்டின் வெற்றியே பன்முக கலாச்சாரம் மற்றும் பன்மொழிகள் அடிபடையில்தான் அமைந்துள்ளது. 54 வருட சுதந்திரத்திற்குப் பிறகும் மலேசியா எவ்வித வெடிகுண்டுகளும் வெடிக்காத மனித பாதுகாப்புக்குப் பங்கமில்லாதப் பல்லின கலாச்சார சூழலைக் கொண்டா நாடாக விளங்கி வருகிறது. அதே வேளை இனங்களிடயிலான உறவில் சுணக்கமும், பாகுபாடும், மற்ற இனங்களினாலும் தன் இனத்தினுள்ளேயும் ஒதுக்கப்படும் சூழலும் இல்லாமல் இல்லை. நம் நாட்டின் அபரிதமான பொருளாதார வளர்ச்சியினால் நம் வயிறு நிறைந்தே இருந்ததும் ஒரு காரணம்தான். இருப்பினும் தற்போது சிந்தனைக்கு உணவிடும் நேரம் வந்துள்ளது.
தேசிய ஒருமைபாடு ஒரு சிக்கலான விடயம்தான். நாம் எவ்வளவுதான் அதற்காக வேண்டினாலும் இன்னும் கிடைத்தபாடுதான் இல்லை. நம் நாட்டிலுள்ள குழந்தைகள் இன மற்றும் மத ரீதியாக மிகவும் பிளவுண்டிருக்கிறார்கள். நம் சுபிட்சமான வாழ்வு விளம்பரங்களில் மட்டுமே ஒன்றாக பவனி வரும் நிலையில் உள்ளது.
இப்பிரச்சனையைப் பற்றி பேசும்போதெல்லாம் நாம் கல்வியைக் கையில் எடுத்துக் கொள்கிறோம். அது இளமையிலேயே தொடங்கப்படுவதால் அதுதான் காரணம் என்ற எளிமையான தீர்வு முன் வைக்கப்படுகிறது. அனைத்துப் பிள்ளைகளையும் ஒரே வழி பள்ளிகளில் பயிற்றுவிப்பதன் வழி திட்டமிட்டு தமிழ். சீன பள்ளிகளைக் கழற்றிவிடும் நடவடிக்கையாகதான் அமைகிறது.
தற்போது 700,00 பேரில் 90%-கும் அதிகமான சீனப்பிள்ளைகள் சீனப்பள்ளியிலும், 210,000 பேரில் 60% தமிழ்ப்பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியிலும் பயில்கின்றனர். தேசியப்பள்ளிகளிலோ ஏறக்குறைய 95,000 தமிழ்ப்பிள்ளைகளும், 50,000 சீனப்பிள்ளைகளும் கிட்டதட்ட 2,200,000 மலாய்ப்பிள்ளைகளும் பயில்கின்றனர். இதுமட்டுமல்லாமல் கிட்டதட்ட 100,000 சீனரல்லாதப் பெரும்பாலும் மலாய்ப்பிள்ளைகளைக் கொண்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் சீனப்பள்ளிகளில் பயில்கின்றனர்.
எங்காவது தொடங்க வேண்டும்.
நாம் தற்போது சுமார் 530,000 சீனப்பிள்ளைகளைச் சீனப்பள்ளியிலிருந்தும் 110,000 தமிழ்ப்பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்தும் அகற்றுவதன் வாயிலாகத் தேசிய ஒருமைபாட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முயல்கிறோம். நாட்டின் மக்கள் தொகையான 26 மில்லியனில் வெறும் 3 சதவிதத்திற்கும் குறைவான 640,000 இளம் பிள்ளைகளை அகற்றுவதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டு பிரச்சனை தீர்விற்கு வந்து விடுமா?
நாம் எங்கிருந்தாவது தொடங்கவே வேண்டும், ஆனால் ஆரம்பப்பள்ளிகளை சமூக ஒருங்கிணைவிற்கான அடிப்படைத் தளமாகக் கொள்வது நம்மை தவறான பாதைக்கும் பங்கத்தையுமே விளைவிக்கும். தாய்மொழி கல்வியின் இருப்பு மட்டுமே தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குலைவை ஏற்படுத்தும் என்பது உண்மையல்ல.
நமது அன்றாட வாழ்வை பாதிக்கும் சமுக அரசியல் சூழலெ அதற்கு முக்கிய காரணமாகும். இனம் மற்றும் சமய ரீதியிலான அரசியல் கட்சிகள், இனத்தை மையப்படுத்தும் மேம்பாட்டு கொள்கைகள், பொது துறையில் ஒரே இனத்தின் ஆதிக்கமும் முடிவெடுக்கும் அதிகாரமும், இனம் மற்றும் சமய ரீதியிலான பாகுபாடு, சமய நல்லிணக்கமின்மை, மற்றும் பாதுகாப்பற்ற ஒதுக்கப்படும உணர்வுகள்தான் இவற்றுக்கு முக்கிய காரணிகளாக இருந்தாலும் நாம் அதை அப்படியே ஏற்றும் அது குறித்து உரையாடாமலும் காலத்தைக் கழிக்கிறோம். இந்நிலையில் ஒரே வழி தேசியப் பள்ளிகள் வழி தேசிய ஒருமைபாட்டை அடைந்து விட முடியும் உரைப்பது முட்டால்தனமகாவே தோன்றுகிறது.
நம்முடைய பழைய அனுபவங்களிலுள்ள சில அனுமானங்கள் நமக்கு உதவக்கூடும். கடந்த முப்பது வருடங்களில் 50 சதவிதத்திற்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகள் ஆரம்பத் தேசியப்பள்ளியில் பயின்றனர். ஆனால் இன்றும் கூட இடைநிலைப்பள்ளிகளில் இவர்களை ஒரு தனி குழுவாகவே இருப்பதைக் காண முடிகிறது, இவர்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டு சிந்தனை உண்டாகி விட்டது என கருத இயலாது.
சிலசமயம் நமது முந்தைய காலங்களே இனிமையானதென தோன்றுகிறது. 70 களில் நான் தமிழ்ப்பள்ளியில் படித்திருந்தாலும் இடைநிலைப்பள்ளி காலங்களில் இன்று என் பிள்ளைகளைவிட என் மலாய்கார நண்பர்களின் கம்பத்து வீடுகளுக்கு ரம்புத்தான் பழம் சாப்பிட நிறைய முறை சென்றதுண்டு. நம்மில் பலர் முன்பு நாம் இன்னும் அதிகமாக ஒற்றுமையாக இருந்தோம் என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்வர்.
இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தாய்மொழி பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகின்றனர். அதோடு தற்போதைய நிலையில் தங்கள் அடையாளங்களைத் தொடர்ந்து தக்கவைக்க ஆரம்பக் கல்வியை தமிழ்ப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகள் பயிலவே விரும்புகின்றனர். இவ்வுணர்வு முன்பு தமிழ்ப்பள்ளிகளைப் புறகணித்த இடைத்தட்டு மக்களிடம் தற்போது வளர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
வலிமையான காரணங்கள்
இதற்கான காரணங்கள் எளிமையானது. நமது அன்றாட வாழ்வில் பாதுகாப்பற்றத் தன்மையான உணர்வை தொடர்ந்து அதிகமாக உணர்கிறோம். அவை ஒரு இந்து சவ அடக்கமாக இருக்கட்டும், அரசியல் தலைவர்களின் அரசியல் கூற்றுகளாகட்டும், அல்லது கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், பணி உயர்வு ஆகியவற்றில் நிகழும் மறுப்பாகவும் இருக்கிறது.
குலைந்துள்ள இன உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கான தேர்வாக ஆரம்பக் கல்வியை மட்டும் கருதக்கூடாது. மாறாக தாய்மொழி கல்வி வழங்கும் நன்மைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 2003-ன் யுனெஸ்கோ அறிக்கையில் தாய்மொழியில் கற்பவர்கள் இன்னும் சிறப்பாகக் கற்பதாகவும் பன்மொழி கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது. ஆய்வாளர்களும் இதனால் பிள்ளைகள் முழுமையாக தங்கள் திறன்களை கற்பர் எனச் சொல்கின்றனர். பிள்ளைகள் கலாச்சாரம் நிறைந்த சூழலில் வளர்க்கப்படுவதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் ஆரம்பக் கல்வியைக் குழம்பிக் கொள்வது யாருக்கும் எப்பயனையும் தராது. இவை வீணான விவாதங்களுக்குதான் வித்திடும். தேசிய ஒருமைப்பாட்டை தற்போதைய ஆரம்பக் கல்வி திட்டம்தான் குலைக்கிறது என்பதற்கான சரியான ஆதாரங்களும் இல்லை. நாம் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையோடு இருக்கிறோம். நமது வித்தியாசங்கள், காலத்தால் கனிந்து முதிர்ச்சி அடைந்திருக்கிறது. பல்லின சூழலை ஒட்டிய கொள்கைகளும் வித்தியாசங்களை ஏற்பதும் இன்னும் வலிமை பெற வேண்டும். அவை நமது வித்தியாசங்களின் பலவீனங்களை களைவதோடு நமது புரிதலை அடர்த்தி ஆக்கவும் வேண்டும்.
ஒரு பல்லின சூழலில் தாய்மொழிக் கல்வியைக் கொண்ட ஆரம்பக் கல்வியின் தேவை இன்று அனைவரும் ஏற்கின்றனர். தன் மொழியையும் கலாச்சாரத்தையும் இழக்கும் பிள்ளை எப்படி மற்ற மொழியையும் கலாச்சாரத்தையும் மதிக்கும் ஆளுமையுடனும் சுயமரியாதையுடனும் திகழும்?
பின்வரும் UNDP-யின் மனித முன்னேற்ற அறிக்கை 2004-ன் விளக்கம் நம் கருத்துகளின் தொகுப்புரையாக அமையும். அடையாளத்தை தக்க வைப்பதற்கான போராட்டம் எதிர்ப்புகளையும் அன்னியர்களை வெறுக்கும் கொள்கைகளையும் விதைத்து மனித முன்னேற்றதையே தடுக்கும். அத்தகையவர் பழமைவாதத்திற்குத் தள்ளப்பட்டு மாற்றங்களை மறுப்பவர்களாகவும் மாற்றுக் கருத்துகளை மறுப்பவர்களாகவும் மாற்றுவதோடு தொடர் முன்னேற்றங்களுக்கு எதிராகவும் தள்ளப்படும் நிலை உருவாகிவிடும். பன்முகக் கலாச்சாரம் இங்கு தொடரவும் நிலைநிறுத்தவும் படவேண்டும். நாடு தன் வித்தியாசங்களை தக்கவைத்துக் கொண்டே தேசிய ஒருமைப்பாட்டைச் சாத்தியப்படுத்துவதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
தாய் மொழி கல்வி அவசியத்தை அருமையாக பதிவு செய்து இருக்கிறார்கள்
good
ஒருமைப்பாடு படும்பாடு பற்றி கொஞ்சம் சொல்லாம் ……..