அம்னோ தலைவர்கள் எதையாவது பேசுவது தான் வழக்கம்

noh“அதற்கான பழி பிரதமரையே சார வேண்டும். அவர் தமது சகாக்களை தமது  வழிக்குக் கொண்டு வர நிறையச் செய்ய வேண்டும். என்றாலும் ஏற்க முடியாத  அந்த நடத்தைகளில் அவருக்கு பங்கு உண்டு என எண்ணத் தோன்றுகிறது”

மசீச தலைவர்: நோ ஒமாருக்குக் கிறுக்கு பிடித்திருக்க வேண்டும்

ஒடின்: மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அவர்களே, சிலாங்கூர் அம்னோ  தலைவர் நோ ஒமாரை நீங்கள் சாடுவது, வெற்றுத் தோட்டாக்களைச் சுடுவதற்குச்  சமமாகும்.

மஇகா வியூக இயக்குநர் எஸ் வேள்பாரி அவர்களே விசாரணை நடத்தப்பட  வேண்டுமானால் உங்கள் குற்றச்சாட்டுக்களையும் அதே படங்களையும் உங்கள்  நாளேடான தமிழ் நேசனில் வெளியிடுங்கள்.

இன்னொரு விஷயம். தயவு செய்து உங்கள் ஆதரவாளர்கள் அனைவரையும்  ஒன்று சேர்த்து மஇகா-விலிருந்து விலகுங்கள். அல்லது கட்சித் தலைவர் பதவியை  எப்படியாவது பிடியுங்கள். அடுத்து கோமாளித்தனமான கூட்டணி ஒன்றிலிருந்து  வெளியேறுங்கள்.

ஷா54: இது தான் செயல்படுவதற்கு தக்க வழி. மசீச, மஇகா, கெராக்கான்
ஆகியவை அம்னோ தவறுகளை இப்போது தான் சுட்டிக் காட்டத்  தொடங்கியுள்ளன. அவை அதனை ஏற்கனவே செய்திருக்க வேண்டும்.

அம்னோ ‘கிறுக்குத்தனமாக’ நடக்க முயன்றால் அவை பிஎன் கூட்டணியிலிருந்து  வெளியேற வேண்டும். நோ எவ்வளவு முட்டாள் என்பதை இது காட்டுகின்றது.  முதுநிலை அம்னோ தலைவர் என்ற முறையில் அவர், பேசுவதற்கு முன்னர்  சிந்திக்க வேண்டும். சுவா சொல்வது சரி தான்.

ஜெஸி43: பள்ளிக்கூட கேண்டீன்களை சுகாதார இன்ஸ்பெக்டர்கள் அவ்வப்போது  சோதனை செய்வதாக நான் அறிகிறேன். குளியலறையில் மாணவர்கள் உணவு  உட்கொள்வதைப் பார்த்தால் அவர்கள் என்ன செய்வார்கள். அதனை அவர்கள்  அனுமதிப்பார்களா ?

இது குறித்து சுகாதார அமைச்சு என்ன சொல்கிறது ? ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப்  பள்ளி தலைமை ஆசிரியர் சொல்லும் பொருத்தமில்லாத காரணங்களை அவர்கள்  ஏற்றுக் கொள்வார்களா ?

நியாயமானவன்: நோ ஒமாரைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்கள் அம்னோ  தரத்தைக் குறைக்கின்றனர். மலாய்க்காரர்களிடம் மட்டுமின்றி அனைத்து  இனங்களுடைய நம்பிக்கையைப் பெற அம்னோ பெரும்பான்மைக் கட்சி என்ற  முறையில் நியாயமாகவும் நீதியாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

நோ ஒமாருக்குப் பதில் ஆற்றல் மிக்க தலைவர் நியமிக்கப்படுவார் என நான்  நம்புகிறேன்.

கெட்டிக்கார வாக்காளன்: நோ ஒமாரை யாரும் குறை சொல்ல முடியாது. காரணம்  அவரை அவரது எஜமானர் நன்கு பாதுகாத்து வருகிறார். ஒரு வேளை ஊக்கம்  கொடுத்திருக்கவும் கூடும்.

அதற்கான பழி பிரதமரையே சார வேண்டும். அவர் தமது சகாக்களை தமது  வழிக்குக் கொண்டு வர நிறையச் செய்ய வேண்டும். என்றாலும் ஏற்க முடியாத  அந்த நடத்தைகளில் அவருக்கு பங்கு உண்டு என எண்ணத் தோன்றுகிறது.

மலேசியாவில் பிறந்தவன்: அம்னோ தேர்தல்கள் வருவதால் மற்றவர்களைப்  போன்று தம்மையும் மலாய்க்காரர்களுடைய ஹீரோவாகக் காட்டிக் கொள்ள நோ  ஒமார் ஒலி எழுப்புகிறார்.

TAGS: