கிறிஸ்துவர்களையும் ஏசுநாதரையும் இழிவுபடுத்தும் முகநூல் பக்கத்தின் உரிமையாளரை அரசாங்கம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது.
இதைத் தெரிவித்த அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் இவோன் இபின், அமைச்சின்கீழ் இயங்கும் சைபர் சிக்யூரிடி துணை நிறுவனம் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் இணையவெளியிலிருந்து பெற்றிருக்கிறது என்றார்.
அந்த முகநூல் பக்கத்தில் ஏசுநாதர் ஒரு மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருப்பதுபோன்ற படமொன்று இடப்பட்டுள்ளது. இதனால் சாபா, சரவாக் சமூகங்களுக்கும் தீவகற்பத்தில் உள்ளவர்களுக்கிடையிலும் உறவுகள் பாதிப்படையலாம் என அமைச்சர் கூறினார்.
அடையாளம் கண்டு நல்ல பாதுகாப்பு அளியுங்கள்..
கண்டுபிடிச்சாச்சு , அப்புறம் என்ன , சட்டத்தின் முன் நிறுத்துங்கள் ! எதற்கு தாமதம் ? விமர்சனம் ?
முகநூலில் கிறிஸ்துவர்களை இழிவுபடுத்தியவர் அடையாளம் காணப்பட்டார் ஓ அப்படியா! பாரிசானுக்கு ஓட்டு போடுங்கடா… சபா சரவாக் கார பயல்களா, இப்ப குத்துதுன்னா கொடையுதா??