பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆட்சி செய்யும் திறன் இல்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயுவை டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார்.
இன்னமும் உலகின் இந்தப் பகுதியில் “முக்கியமான தலைவர்” என்ற நினைப்பு லீக்கு என கர்பால் சாடினார். “அவரது காலம் முடிந்துவிட்டது. அந்திம காலத்தை அமைதியாக முடித்துக்கொள்வது நல்லது”, என்றாரவர்.
லீ, ஆகக் கடைசியாக வெளிவந்துள்ள அவரது One man’s view of the world என்னும் நூலில் பக்காத்தானை “சந்தர்ப்பவாத கும்பல்” என்று வருணித்திருக்கிறார்.
லீ குவான் யு கூறுவதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சென்ற மலேசிய பொதுத்தேர்தலில் அனேக தில்லுமுல்லுகள், திருட்டுத்தனங்கள், திருகுத்தாலங்கள் புரிந்து மீண்டும் ஆட்சியை கைப் பற்றியது, தேசிய முன்னணி. இதை அனைவரும் அறிவோம். பக்காத்தானுக்கே இது நன்றாக தெரியும். இதனை நன்கறிந்த பக்காத்தான், அதனை தடுக்கும் சக்தி இல்லாததால், அனைத்து மலேசியர்களும் மனம் நொந்து போனோம். கெடுதலை முறியடிக்கும் சக்தி பக்காத்தானிடம் இல்லாததால், ஆட்சி செய்யும் தகுதி இருக்குமா?
தேர்தல் நேரத்தில் பாரிசான் திருடர்கள் எல்லாம் மக்கள் கூட்டணியோடு இணைந்தார்களே அவர்களை என்னவென்று சொல்லுவது? “சந்தர்ப்பவாதக் கும்பல்” என்பது தவறு என்று ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது!
குவான் இயு இவர் நாட்டை பார்துகொள்ளவேண்டியதுதானே ,ஏன் மலேசியா நாட்டு விவகாரத்தில் தலையிடுகிறார் ?இவர் பேசுவதை பார்த்தால் pas ,keadilan கட்சியை குறை கூறுவது போல் இருக்கே ,DAP க்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறாரோ ??அப்ப கூட இன உணர்வுகள் இருக்கு ,பாராட்ட கூடிய விசியம்தான் ,தமிழர்கள் ? ரெண்டுகெட்டான் தனமாக ,இந்த கட்சியிலும் இல்லாமல் அந்த கட்சியிலும் இல்லாமல் உளறிக்கொண்டு இருப்பார்கள் ,நல்ல கொள்கை உள்ளவர்கள் ,
அன்வார் இதற்க்கு பதில் அளித்து வீட்டார் ,dap தன் கருத்தை ஏன் இன்னும் சொல்ல வில்லை ???உறவு நாடி வந்த இனம் தடுக்கிறது ,அது சரி