ஆர்ஓஎஸ் அதன் முடிவுகளுக்குக் காரணம் கூற வேண்டியதில்லை

1 dapசங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), டிஏபி   அதன்  செயலவைக்குப்  புதிதாக  தேர்தல் நடத்த வேண்டும்  என்று  உத்தரவிட்டதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை  என்றும்  அதற்கான  சங்கச் சட்டவிதியை அடையாளம் காண்பிக்க வேண்டியதில்லை  என்றும்  கூறியுள்ளது.

சங்கச் சட்டம் 1966,  ஆர்ஓஎஸ் அதன்  முடிவுகளுக்கான காரணத்தை விளக்க வேண்டும் எந்த இடத்திலும்  குறிப்பிடவில்லை என ஆர்ஓஎஸ்  சார்பாக எழுதிய கடிதத்தில்  டஸ்மண்ட் தாஸ் மைக்கல் தாஸ் கூறி இருந்தார்.

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்,  புதிதாக தேர்தல் நடத்துவதில் பிரச்னை இல்லை என்றும் ஆனால், ஆர்ஓஎஸ் முதலில் அதன் முடிவுக்குக் காரணம் என்னவென்பதையும் டிஏபி எங்கு சட்டத்தை மீறியது என்பதையும் சொல்ல வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்தினார்.