டிஏபி ஆர்ஒஎஸ்-ஸிடமிருந்து விளக்கம் பெற இறுதி முயற்சி செய்யும்

DAP.pngடிஏபி, மத்திய செயற்குழுவுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என  ஆர்ஒஎஸ்எந்தச் சட்டத்தின் கீழ் என்ன காரணங்களுக்காக உத்தரவிடுகிறது  என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு சங்கப் பதிவதிகாரி அலுவலகத் தலைமை  இயக்குநர் அப்துல் ரஹ்மானை சந்திப்பதற்கு இறுதியாக ஒரு முயற்சியை  மேற்கொள்ளும்.

crime1ஆர்ஒஎஸ் கோரப்படும் விளக்கங்களைத் தருமானால் புதிதாக தேர்தல்களை நடத்த  கட்சியின் மத்திய செயற்குழு தயாராக இருப்பதாக நேற்றிரவு நடைபெற்ற அந்தக்  குழுவின் அவசரக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது என்றும் கட்சியின்  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

ஆர்ஒஎஸ்-உடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பு டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக்-கிற்குக்  டுக்கப்பட்டுள்ளதாகவும் லிம்  விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

TAGS: