‘கூட்டரசுத் தடைக்கற்கள்’ குவான் எங்-கிற்கு முட்டுக்கட்டையாக இருந்தன

limபினாங்கு மாநிலத்தை 2008ம் ஆண்டு பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்ட  பின்னர் அரசாங்கச் சேவையுடன் வேலை செய்வது தான் மாநில அரசாங்கம்  எதிர்நோக்கிய பெரிய சவால் என முதலமைச்சர் லிம் குவான் எங் சொல்கிறார்.

மாநில சட்ட அதிகாரி போன்ற முக்கிய நியமனங்களை கூட்டரசு அரசாங்கம்  செய்வதை அவர் சுட்டிக் காட்டினார்.

உண்மையில் மாநில சட்ட ஆலோசகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
காரணமாக தமது அலுவலகத்தில் பணியாற்றிய இளம் சட்ட அதிகாரியை இழக்க  நேரிட்டதாக லிம் குறிப்பிட்டார்.

தகவல் சுதந்திரச் சட்டம், ஊராட்சி மன்றச் சட்டம் போன்றவை மாநில அளவில்  அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட போதிலும் அவற்றை அமலாக்க  முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கக் கூடிய விலையில் பினாங்கு மக்களுக்கு  வீடுகளை வழங்க வேண்டிய நடைமுறைகள் கூட்டரசு நிர்வாகத்தின் கீழ் வந்த  போதிலும் மாநில அரசின் மீது பழி போடப்படுகின்றது என்றும் லிம்  வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

என்றாலும் அரசாங்கச் சேவையின் ஆதரவைப் பெறாவிட்டால் லிம் நிர்வாகத்துக்கு  நடைமுறைகள் மிகவும் சிரமமாக இருக்கும்.

அத்தகைய சவால்களை லிம் ‘கூட்டரசுத் தடைக்கற்கள்’ என வருணித்தார்.